வழுக்கி விழுந்த ஓய்வுபெற்ற ஆவின் நிறுவன ஊழியர் சாவு

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் வீட்டில் வழுக்கி விழுந்த ஓய்வுபெற்ற ஆவின் நிறுவன ஊழியர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-30 07:12 GMT

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் கிராமம் சுப்பிரமணி சிவா தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 64). இவர் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதியன்று வீட்டில் இருந்த ரவிக்குமார் கழிவறைக்கு செல்வதற்காக சென்றார். அப்போது அவர் வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அவரது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்