பஞ்சமூர்த்தி தேர்கள் புனரமைக்கும் பணி

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பஞ்சமூர்த்தி தேர்கள் புனமைக்கும் பணி நடந்து வருகிறது.

Update: 2022-11-12 16:55 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நிகழ்ச்சியும், மகா தீப தரிசனமும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதியும், மகா தீப தரிசனம் 6-ந்தேதியும் நடைபெற உள்ளது.

கொரோனா காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளாக கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு தீபத்திருவிழா தேரோட்டம் விமர்சையாக நடைபெற உள்ளது. இதனால் பஞ்சமூர்த்திகளின் தேர்கள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

தேர்களுக்கு வர்ணம் பூசும் பணி, சக்கரங்கள் சரி பார்க்கும் பணி போன்றவை நடைபெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்