பெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவருடைய சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க.
பெரியாரின் 145-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவருடைய சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியம், ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கரன், மணி, நல்லதம்பி, மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் சரவணன், முருகன், சண்முகம், பாண்டியன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், பாலு, மாரியப்பன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் கனகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ராம்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், கே.சி.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ம.க.
இதேபோல் பா.ம.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், பசுமை தாயகம் மாநில இணை செயலாளர் சத்ரியசேகர், மாவட்ட பொருளாளர் கவிதா சிவா, மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தங்கம் கவுசல்யா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் இளவழகன், மாவட்ட செயலாளர் வைரம் ஆகியோர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் இயக்க பேரவையின் சார்பில் தலைவர் சுந்தரவதனம் தலைமையிலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையிலும், அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையிலும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு அமைப்புகள் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.