ஜமாபந்தி நிறைவு நாளில் 78 மனுக்களுக்கு தீர்வு
ஜமாபந்தி நிறைவு நாளில் 78 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர், வேதாரண்யம், திருக்குவளை, நாகை ஆகிய 4 தாலுகாவிற்கான ஜமாபந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதன் நிறைவு நாளையொட்டி நாகை தாசில்தார் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் முருகேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் அமுதா முன்னிலை வகித்தார். இதில் தெற்கு பொய்கை நல்லூர் சரகத்துக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 196 மனுக்களை அளித்தனர். இதில் வீட்டுமனை பட்டா 18 பேருக்கு, தையல் எந்திரம் 2 பேருக்கு வழங்கப்பட்டது. 2 பெண் குழந்தைகளுக்கான திட்டத்தின்படி ரூ.50 ஆயிரம் உதவித்தொகை 3 பேருக்கு வழங்கப்பட்டது. மொத்தம் 78 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் நீலாயதாச்சி, துணை தாசில்தார் யசோதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.