மத்திய அரசின் அலுவலகம் முன்பு 30-ந்தேதி மறியல்-இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்
உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை கண்டித்து மத்திய அரசின் அலுவலகம் முன்பு 30-ந்தேதி மறியல் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு ஆலோசனை கூட்டம் குருவாலப்பகோவில் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா பெரியசாமி தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சபாபதி முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் ராமநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி, முன்னாள் மாவட்ட செயலாளர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் விலைவாசி உயர்வு, அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை கண்டித்து வருகிற 30-ந்தேதி மத்திய அரசின் அலுவலகம் முன்பு மறியல் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.