முசிறி ஜமாபந்தியில் 35 மனுக்களுக்கு தீர்வு

முசிறி ஜமாபந்தியில் 35 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-06-14 19:16 GMT

முசிறி தாசில்தார் அலுவலகத்தில் முசிறி பிர்காவிற்கான ஜமாபந்தி நடந்தது. முகாமிற்கு தனி துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் செல்வம் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் பாத்திமாசகாயராஜ், சத்தியநாராயணன், துணை தாசில்தார்கள் தங்கவேல், தனபாக்கியம், சுந்தரி, கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொதுமக்களிடமிருந்து 82 மனுக்கள் பெறப்பட்டதில் 35 மனுக்களுக்கு உடனடி தீர்வும், 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன., 45 மனுக்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. நேற்று புலிவலம் பிர்க்காவிற்கு ஜமாபந்தி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்