மணிப்பூரில் கலவரத்திற்கு முழு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலகக்கோரி தீர்மானம்

மணிப்பூரில் கலவரத்திற்கு முழு பொறுப்பேற்று மத்திய அரசு பதவி விலகக்கோரி தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

Update: 2023-09-29 18:06 GMT

கரூர் மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான களப்பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வெண்ணைமலையில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற வலியுறுத்தி அனைத்து தொகுதிகளிலும் திண்ணை பிரசாரம் செய்ய வேண்டும், மணிப்பூரில் நடக்கும் தொடர் கலவரத்திற்கு முழுபொறுப்பேற்று மத்திய அரசும், மாநில பா.ஜ.க. அரசும் பதவி விலக வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மாநில பொதுச்செயலாளர் இளவேனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்