கரைபுரண்டு ஓடும் காவிரி: வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி..!

மேட்டூர் அணையில் இருந்து1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

Update: 2022-08-30 08:55 GMT

பவானி:

தமிழகத்தில் மேலடுக்க சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானி காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது 1 லட்சத்து 15ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தாழ்வான பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது

தொடர்ந்து காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்க வைக்கப்பட்டவர்களுக்கு வருவாய்த்துறையினர் மூலம் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்