திருக்கோவிலூரில் ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருக்கோவிலூரில் ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனா்.

Update: 2022-10-14 18:45 GMT


திருக்கோவிலூர் 

திருக்கோவிலூர் நகரில் செயல்பட்டு வரும் பல்வேறு ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு ஓட்டலில் இறைச்சிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அதன் உரிமையாளர்களை எச்சரித்து, அவற்றை கைப்பற்றினர். மேலும், இது தொடர்பாக அந்த கடைக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்