தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஆய்வு

தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஆய்வு

Update: 2023-06-26 18:45 GMT

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பரவலாக மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தின் மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பிச்சன்கோட்டகம் கிராமத்தில் வழங்கப்பட்ட மா வயலினை திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், புதிதாக மா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு 100 ஒட்டு செடிகள் வீதம் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வம் உள்ள விவசாயிகள் இதற்கு தேவையான ஆவணங்களாக அடங்கல், கணினி சிட்டா நகல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு ஆகியவை திருத்துறைப்பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். மேலும் தங்களது வீட்டில் இருந்து விண்ணப்பிக்க கைபேசியில் உழவன் செயலி அல்லது tnhorticulture.gov.in என்ற இணையத்தின் மூலமும் பதிவு செய்து பயன்பெறலாம் என்றார். ஆய்வின்போது தோட்டக்கலை அலுவலர் மதுமிதா, உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்