கிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்தவர் மீட்கப்பட்டார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீமான்(வயது 56). இவர் நேற்று முன்தினம் இரவு தண்ணீர் இல்லாத 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு வந்து கிணற்றுக்குள் இருந்து சீமானை உயிருடன் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அவரை, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.