மாணவி வாலிபருடன் மீட்பு

தென்காசியில் மாயமான பள்ளி மாணவி வாலிபருடன் மீட்பு

Update: 2023-02-09 18:45 GMT

தென்காசி பகுதியைச் சேர்ந்த மாணவி தென்காசி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 2-ந் தேதி பள்ளி சீருடை அணிந்து பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இரவு 8 மணிக்கு அவரது தாயார் தென்காசி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவர் புதுச்சேரியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் புதுச்சேரிக்கு சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து சென்னைக்குச் சென்றதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சென்னைக்கு சென்று அவரை கண்டுபிடித்தனர். அப்போது அவருடன் புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் இருந்தார்.

இருவரையும் போலீசார் மீட்டு தென்காசி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அங்கு இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வாலிபரின் பெற்றோரை போலீசார் வரவழைத்து உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்