மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு

தக்கலை அருகே மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2023-07-10 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே மாயமான முதியவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.

மாயமான முதியவர்

தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டையில் வசித்தவர் பூமணி (வயது 70). இவருக்கு 2 மகள்களும், பிரபாகரன்(40) என்ற மகனும் உள்ளனர். மகன் கேரளாவில் வேலை செய்து வருகிறார் இதனால் மருமகள், பேரப்பிள்ளைகளோடு பூமணி வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அவர் வீட்டின் முன்பகுதியில் படுத்து தூங்கினார்.

மறுநாள் அதிகாலையில் மருமகள் எழுந்து பார்த்த போது பூமணியை காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி நேற்று காலை தக்கலை போலீசில் புகார் செய்தனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் பகல் 3 மணியளவில் பூமணியின் வீட்டின் அருகில் உள்ள பொதுக்கிணற்றில் அந்த பகுதியில் உள்ளவர்கள் தண்ணீர் எடுக்க சென்றனர். அப்போது கிணற்றில் பூமணி பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர் இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களை வரவழைத்து பூமணி உடலை மீட்டனர். பூமணியின் வீட்டின் சுற்றுச்சுவரையொட்டி கிணறு உள்ளதால், பூமணி இரவு நேரத்தில் கிணற்றின் மதில் மீது ஏறி உட்காந்த போது தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்