சகதியில் சிக்கிக்கொண்ட பசுமாடு மீட்பு

திருவாடானை அருகே சகதியில் சிக்கிக்கொண்ட பசுமாடு மீட்கப்பட்டது.

Update: 2023-02-23 18:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவருக்கு சொந்தமான சினை பசுமாடு ஒன்று மேய்ச்சலுக்குச் சென்ற போது அப்பகுதியில் இருந்த பள்ளத்தில் இருந்த சகதியில் சிக்கி கொண்டது. இது குறித்து கோடனூர் ஊராட்சி தலைவர் ஆலம்பாடி காந்தி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான வீரர்கள் கிராம மக்களுடன் இணைந்து பசுமாட்டை பத்திரமாக மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்