ஜம்பலப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு

ஜம்பலப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு

Update: 2022-06-23 11:31 GMT

தளி

ஜம்பலப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

ஜம்பலப்பெருமாள் கோவில்

உடுமலையை அடுத்த ஆண்டியகவுண்டனூர் பகுதியில் ஜம்பலப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலம் கடந்த 20 வருடங்களாக தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட இந்த சமயஅறநிலையத்துறை ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து இணை ஆணையர் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் செல்வராஜ் தலைமையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி நிலம் கோவில் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி ரூ. 5 கோடி சந்தை மதிப்பிலான 32.87 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்வின் போது வருவாய்த்துறை, போலீசார், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் மீட்கப்பட்ட நிலத்தில் அறநிலையத்துறையின் சார்பில் எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டு உள்ளது. அதில் கோவில் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ய கூடாதெனவும் மீறுபவர்கள் மீது அறநிலையத்துறையின் சட்டதிட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

--

நிலங்களை முறையாக பராமரிக்கும் இந்து அறநிலையத்துறை (பாக்ஸ்)

முன்னோர்கள் காலத்தில் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அபயம் அளிக்கும் இடமாக விளங்கியது கோவில்கள். அது போன்ற கோவில்களுக்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து கோவில்களுக்கு நிலத்தை எழுதி வைத்தனர். அந்த நிலங்கள் இன்றளவும் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பரவி கிடக்கின்றது. நிலங்களுடன் கூடிய ஒரு சில கோவில்களை தவிர மற்ற கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு நிலங்களும் கோவில்களும் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு சில பகுதியில் தனிநபர்கள் கோவில் நிலங்களை ஆக்கிரமித்து பல்வேறு பணிகளுக்கு உபயோகித்து வருவது தொடர்கதையாக உள்ளது. அதை மீட்க வேண்டும்.


Tags:    

மேலும் செய்திகள்