தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு
தொட்டிக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே நடுஹட்டி கிரமத்தில் விவசாயி ஆரிபோஜன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று, அதே பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டு இருந்தது. அப்போது மூடப்படாத 10 அடி ஆழமுள்ள குறுகிய தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதனால் வெளியே வர முடியாமல் தவித்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கோத்தகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கருப்புசாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி, நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பசுமாட்டை பத்திரமாக மீட்டனர்.