மேலூர் அருகே ஊருக்குள் புகுந்த புள்ளி மான் மீட்பு

மேலூர் அருகே ஊருக்குள் புகுந்த புள்ளி மான் மீட்கப்பட்டது

Update: 2023-05-06 20:40 GMT

மேலூர்,

மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் உள்ள பெருமாள்மலையில் 200- க்கும் மேற்பட்ட மிளா மான்கள் மற்றும் புள்ளிமான்கள் வசிக்கின்றன. இந்நிலையில் நரசிங்கம்பட்டி மலையில் இருந்து கிராமத்துக்குள் வந்த 3 அடி உயரமுள்ள பெரிய கொம்புகளுடனான ஆண் புள்ளிமான் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்து வெளியே செல்ல வழி தெரியாமல் இரவில் மறைவான இடத்தில் தங்கிவிட்டது. விடிந்தவுடன் அதிகாலை 6 மணியளவில் தெருக்களின் வழியாக அங்கும் இங்கும் ஓடியது. இதனை கண்ட நரசிங்கம்பட்டி கிராம வாலிபர்கள் மலைச்சாமி, ரஞ்சித், கார்த்திக் கண்ணன், அருண்பாண்டி உள்ளிட்டோர் புள்ளிமானை பிடித்து பாதுகாப்பாக கயிற்றால் கட்டி வைத்து வன இலாகாவினருக்கு தகவல் தந்தனர். அவர்கள் வர தாமதம் ஆனதால் கிராம மக்களையே வாடகை வேன் ஒன்றில் புள்ளி மானை தூக்கி கொண்டு அழகர் மலை பகுதிக்கு எடுத்து சென்று வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்