மேட்டூர் அருகே வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு
மேட்டூர் அருகே வீட்டுக்குள் புகுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
மேட்டூர்:
மேட்டூரை அடுத்த நாட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் திருக்கைவேலு. நேற்று பாலமலை வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த புள்ளிமான் ஒன்று திருக்கைவேலு வீட்டுக்குள் புகுந்தது. இதனை கண்ட குடும்பத்தினர் மேட்டூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் அங்கு சென்று பல மணி நேரம் போராடி புள்ளிமானை மீட்டனர். இதையடுத்து கால்நடை டாக்டர் தாமோதரன் வரவழைக்கப்பட்டு மானுக்கு சிகிச்சை அளித்து வனவர் சிவகுமாரிடம் மாைன ஒப்படைத்தார். இந்த மானை வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.