மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபர் மீட்பு
மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபர் மீட்கப்பட்டார்.
மணப்பாறையில் கடைவீதி, ரெயில்வேநிலைய ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 வயது மதிக்கதக்க வடமாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்து வந்தார். பொதுமக்களிடம் டீ, பிஸ்கட் உள்ளிட்டவைகளை வாங்கி சாப்பிட்டு வந்ததுடன் கையில் குச்சி அல்லது கம்பி ஏதேனும் ஒன்றை வைத்து சுற்றி திரிந்ததால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் சாந்திவனம் மன நல காப்பக நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் இயக்குனர் அரசப்பன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தீனா, செவிலியர் அனிதா அடங்கிய குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட வாலிபரை மீட்டு மன நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.