ஆற்றில் மிதந்த பெண் பிணம் மீட்பு

ஆற்றில் மிதந்த பெண் பிணம் மீட்பு

Update: 2022-11-30 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை அருகே அம்பராம்பாளையம் ஆழியாற்றில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் வந்து குளித்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஆற்றில் பெண் பிணம் மிதப்பதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்ைத மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, இறந்து கிடந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்