கிணற்றில் தவறி விழுந்த பாம்பு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பாம்பு மீட்பு

Update: 2023-05-30 18:45 GMT

குளச்சல்:

குளச்சல் அருகே உள்ள பத்தறையில் ரிஷியிருப்பு சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் கிணறு தோண்டும் பணி நடந்து வருகிறது. தற்போது 20 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலையில் தொழிலாளர்கள் வழக்கம் போல் கிணறு தோண்டுவதற்கு வந்தனர். அப்போது கிணற்றுக்குள் ஒரு சாரை பாம்பு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது இரையை துரத்தி வந்த போது தவறி விழுந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நாகர்கோவில் வனச்சரக ஊழியர் சுந்தரதாஸ் சம்பவ இடத்துக்கு வந்து வலையை கட்டி கிணற்றின் உள்ளே இறக்கி விட்டு சென்றார். நேற்று காலையில் மீண்டும் வந்து வலையில் சிக்கியிருந்த பாம்பை உயிருடன் மீட்டு கிணற்றில் இருந்து வெளியே எடுத்தார். அது சுமார் 7 அடி நீளம் இருந்தது. பின்னர் அந்த பாம்பு குலசேகரம் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்