கிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு

தட்டார்மடம் அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Update: 2023-08-27 18:45 GMT

தட்டார்மடம் அருகே பெரியதாழையில் உள்ள 40 அடி ஆழமுள்ள கிணற்றில் ஒருவர் தவறிவிழுந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாக சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் சதிஷ்குமார், சங்கரலிங்கம், மாரிமுத்து, சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி கிணற்றில் காயங்களுடன் இருந்த நபரை பத்திரமாக மீட்டனர். விசாரணையில் அவர் பெரியதாழை மேலத்தெரு, ஜார்ஜ்மிக்கேல் நகரைச் சேர்ந்த மததேசி மகன் அம்மாசி என்ற பீட்டர் (வயது 50) எனவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிய வந்தது. காயங்களுடன் இருந்த அவரை தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்