கிணற்றில் விழுந்த மயில் மீட்பு
கடையநல்லூர் அருகே கிணற்றில் விழுந்த மயில் மீட்கப்பட்டது
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே போகநல்லூரில் உள்ள தனியார் தோட்டத்தில் 50 அடி ஆழ கிணற்றில் மயில் விழுந்து விட்டதாக கடையநல்லூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராம், நிலைய அலுவலர் (போக்குவரத்து) சுந்தர்ராஜ், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த மயிலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.