குட்டையில் தவறி விழுந்த குதிரை மீட்பு

குட்டையில் தவறி விழுந்த குதிரையை தீயணைப்புத்துறையினர் உயிருடன் கயிறு கட்டி மீட்டனர்.

Update: 2023-04-24 19:30 GMT

கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் குட்டை ஒன்று உள்ளது. நேற்று இந்த குட்டை அருகே குமார் என்பவருடைய குதிரை ஒன்று ேமய்ந்து கொண்டிருந்தது. அந்த குதிரை எதிர்பாராமல் குட்டையில் தவறி விழுந்தது. இதில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி குதிரையை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த குதிரை துள்ளிக்குதித்து கொண்டு அங்கு இருந்து வேகமாக ஓடியது.

இதேபோல்கொடைக்கானல் பஸ்நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிளின் என்ஜின் பகுதியில் பாம்பு ஒன்று இருப்பதை அந்த வழியாக சென்றவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி, 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை பிடித்தனர். பின்பு அந்த பாம்பை வனத்துறையினரிடம் தீயணைப்பு படையினர் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்