டேனிஷ்பேட்டை அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு
டேனிஷ்பேட்டை அருகே கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.
ஓமலூர்:
ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை உள்கோம்பை பகுதியை சேர்ந்தவர் நடராஜன், விவசாயி. இவருக்கு சொந்தமான பசு மாடு அவரது கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டு இருந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும், காடையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் உயிருக்கு போராடி கொண்டிருந்த பசு மாட்டை கயிறு கட்டி மீட்டனர்.