கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

திருப்பத்தூர் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2023-09-17 14:41 GMT

திருப்பத்தூர் அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சீராளன் என்பவர் மாடுகளை வளர்த்து வருகிறார்.

அவரது பசுமாடு ஒன்று இன்று மேய்ச்சலுக்கு சென்றபோது அங்குள்ள 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது.

இதைபார்த்த பொதுமக்கள் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு கட்டி பசுமாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்