கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்பு

சோழவந்தான் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.

Update: 2023-08-30 21:09 GMT

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது தோட்டத்தில் 60 அடி ஆழ கிணற்றில் 40 அடிக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் இவரது தோட்டம் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதில் அந்த பசுமாடு கிணற்று நீரில் தத்தளித்தது. உடனே சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் கிணற்றை எட்டி பார்த்தனர். கிணற்றுக்குள் பசுமாடு விழுந்து கிடப்பதை பார்த்து உடனடியாக சோழவந்தான் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றுக்குள் விழுந்து கிடந்த பசுமாட்டை கயிற்றை கட்டி மேலே தூக்கினர். அதன்பின்னர் அந்த பசுமாட்டுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்த செயலை அந்த கிராம மக்கள் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்