கிணற்றுக்குள் விழுந்த எருமை மீட்பு

வடமதுரை அருகே கிணற்றுக்குள் விழுந்த எருமை உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2023-08-08 16:25 GMT

வடமதுரை அருகே உள்ள சுந்தரபுரி அரசம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60), விவசாயி. இவர், தனது தோட்டத்தில் பசு மற்றும் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். அதில் சினையாக இருந்த எருமை மாடு ஒன்று, தோட்டத்தில் இருந்த கிணற்றின் அருகே நேற்று மேய்ந்து கொண்டிருந்தது. திடீரென அந்த எருமை, கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

60 அடி ஆழம் கொண்ட கிணற்றில், சுமார் 25 அடி தண்ணீர் இருந்தது. இதனால் எருமை தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கந்தசாமி, இதுதொடர்பாக வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்தனர். பின்னர் கிணற்றுக்குள் இறங்கி, கயிறு கட்டி, பொக்லைன் எந்திரத்தின் மூலம் எருமையை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்