ஊட்டியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த எருமை மாடு மீட்பு
ஊட்டியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த எருமை மாடு மீட்கப்பட்டது.
ஊட்டி
ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் சவுத்விக் என்ற இடத்தில் கேரட் கழுவும் நிலையத்தில் 10 அடி ஆழமுள்ள தொட்டி உள்ளது. இங்கு 8 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்த நிலையில் எருமை மாடு ஒன்று தவறி தொட்டிக்குள் விழுந்தது. இதைத்தொடர்ந்து தொட்டியில் இருந்து வெளியே வர எருமை மாடு பலமுறை முயற்சி செய்தும் வெளியே வர முடியவில்லை.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து ஊட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பெயரில் நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த எருமை மாட்டை கயிறு கட்டி லாவகமாக மீட்டனர். இதன் பின்னர் எருமை மாடு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.