கால்வாயில் சிக்கிய 2 நாய் குட்டிகள் மீட்பு

கால்வாயில் சிக்கிய 2 நாய் குட்டிகள் மீட்கப்பட்டது.

Update: 2023-06-21 21:15 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. ஊட்டியில் கடந்த 2 நாட்களாக மதியத்திற்கு பின்னர் கனமழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் லோயர் பஜார், கோடப்பமந்து கால்வாய் பகுதியில் 2 நாய் குட்டிகள் தண்ணீர் மற்றும் புதருக்கு இடையில் சிக்கி தவித்தன. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு நாய் குட்டிகளை உடனடியாக காப்பாற்ற கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த தகவலின் பேரில், நீலகிரி விலங்குகள் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் பிரேமா, மோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு வாகனம் மூலம் நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்