பெரம்பலூரில் அரசு மாணவர் விளையாட்டு விடுதி தொடங்க கோரிக்கை

பெரம்பலூரில் அரசு மாணவர் விளையாட்டு விடுதி தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-26 18:49 GMT

பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டம் மாநில துணைத்தலைவரும், தமிழ்ச்செம்மல் விருது பெற்ற முன்னாள் ராணுவ அலுவலருமான பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தின் அடையாள சின்னமாக வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடி கோட்டையை அறிவிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எளம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தர பள்ளிக்கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூரில் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி பெறுவதற்காக அரசு மாணவர் விளையாட்டு விடுதி தொடங்க வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக பனைவிதைகளை அதிகளவு நடுவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் குண்டும், குழியுமாக மாறியுள்ள சாலைகளை உடனே சீரமைத்து தர வேண்டும். வேப்பந்தட்டை மற்றும் பெரம்பலூர் ஒன்றிய பகுதிகளில் மகளிருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனங்களை தொடங்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்