உணவு அருந்தும் கூடத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவு அருந்தும் கூடத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-01 18:06 GMT

பெரம்பலூர் 

உணவு அருந்தும் கூடம்

பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் 2 தளங்களை கொண்ட கட்டிடம் ஆகும். தரைத்தளம், முதல் தளம், 2-ம் தளம் ஆகியவற்றில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. அதில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் மதிய வேளையில் அமர்ந்து உணவு உண்பதற்காக கலெக்டர் அலுவலகம் தரைத்தளத்தில் தனியாக உணவு அருந்தும் கூடம் (டைனிங் ஹால்) கட்டப்பட்டது. அந்த கூடத்தில் அமர்ந்து அலுவலர்கள், ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட்டு வந்தனர்.

பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

கடந்த சில ஆண்டுகளாக உணவு அருந்தும் கூடம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் வீட்டில் இருந்து கொண்டு வரும் மதிய உணவை தங்களது இருக்கைகளுக்கு அருகிலேயே வைத்து சிரமத்துடன் தான் சாப்பிட்டு வருகின்றனர். அந்த கூடம் பராமரிக்கப்படாததால் பழுதடைந்து வருகிறது. மேலும் அதனை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுவதுடன், விஷ ஜந்துக்கள் குடி புகுந்து வருகிறது. எனவே கலெக்டர் அலுவலகத்தில் உணவு அருந்தும் கூடத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்