கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-03 21:34 GMT

தாயில்பட்டி, 

சிவகாசி மாநகராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணைக்குள் ஏராளமான கருவேல மரங்கள் புதர் போன்று மண்டி வளர்ந்து உள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன், மழைக்காலங்களில் நீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதனை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வெம்பக்கோட்டை பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆதலால் முழுமையாக மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்