விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விவரங்களை பதிவு செய்ய வேண்டுகோள்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விவரங்களை பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுவதும் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் உள்ளவர்கள் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க விருப்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விளையாட்டு அலுவலரை 7401703516 என்ற செல்போன் எண்ணிலும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விளையாட்டு அலுவலரை 7401703499 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.