சொத்து வரி, குடிநீர் வரியை 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டுகோள்

கீழக்கரை நகராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரியை 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Update: 2023-03-27 18:45 GMT

கீழக்கரை, 

கீழக்கரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, கடை வாடகை, குடிநீர் கட்டணங்களை வருகிற 31-ந்தேதிக்குள் செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை, கடைகளை பூட்டி சீல் வைத்தல், வரி செலுத்தாதவர்களின் பெயர்களை விளம்பர பலகை மூலம் வெளியிடுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக தினமும் ஒலிப் பெருக்கி வாயிலாக நகராட்சி வாகனம் மூலம் அறிவிக்கப்படுகிறது. நகர் பகுதிகளில் வருவாய் உதவியாளர்கள், ஆய்வாளர்கள் வீடு வீடாக சென்று வரிவசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள், வியாபாரிகள் வருகிற 31-ந்தேதிக்குள் வரிகளை செலுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்த்து நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களிலும் நகராட்சி கணினி வரி வசூல் மையம் செயல்பட்டு வருகிறது என்று நகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்