முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டுகோள்

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Update: 2023-06-17 18:30 GMT

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பைசல் நிசார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மாநில செயலாளர் முஜிபுர் ரஹ்மான் கலந்து கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். தவ்ஹீதும் தர்பியத்தும் என்ற செயல் திட்டத்தை அடுத்த 4 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. பொது சிவில் சட்டம் தொடர்பான முன்னெடுப்புகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மணிப்பூர் கலவரத்தில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள குக்கி இனத்தினருக்கு எதிராக சமூக விரோதிகளால் வன்முறை தூண்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு மீண்டும் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. 3.5 சதவீத இடஒதுக்கீடு பல துறைகளில் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாசார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நீண்ட காலமாக சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்