மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை
மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், அரங்கோட்டை மடத்து தெரு 8-வது வார்டு சாலையின் நடுப்பகுதியில் மின்விளக்கு உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்றி வேறு இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.