ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில்மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு

ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-12-28 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், கால்வாய், நட்டார்குளம், கொங்கராயகுறிச்சி, நாணல்காடு, வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, பூவாணி, தெற்கு காரசேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட பொருளாளர் கண்ணன் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தங்களது குடும்ப ரேஷன் கார்டை ஏ.ஏ.ஒய். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கார்டாக (ஏ.ஏ.ஒய்) மாற்றித்தர வேண்டும்' என தெரிவித்திருந்தனர்.

நிகழ்ச்சியில் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கால்வாய் மணி, மந்திரம், வடக்கு காரசேரி மாடசாமி, கனகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்