டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தோகைமலை அருகே பேரூர் உடையாபட்டி கடைவீதியில் டாஸ்மாக்கடை கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தினமும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை யாரும் கண்டு கொள்ளவில்லையாம். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த டாஸ்மாக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.