மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-11 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மீனவர் பேரவை (தெற்கு மாவட்டம்) தலைவர் பிரின்சோ ரைமண்ட் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த 8-ந் தேதி ராமேசுவரத்தில் இருந்து 2 நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 15 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து அந்நாட்டு சிறையில் அடைத்துள்ளது.

இந்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கி உதவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்