கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Update: 2022-10-15 18:45 GMT

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர்கள் ஜெகநாதசுந்தரம், ரத்தினவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் கேசவன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துணை தலைவர் கேசவன் பேசியதாவது:- வாணியங்குடியில் உள்ள கடம்பங்குளம் கண்மாயில் சிவகங்கை நகரில் இருந்து வரும் கழிவு நீர் கலக்கிறது. இதனால் பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. எனவே கண்மாய்க்கு வரும் கழிவு நீரை தடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் தங்களுடைய ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைக்க உள்ளனர் என்றார்.

ஒன்றிய கவுன்சிலர் கருப்பணன்:- 15-வது நிதிக்குழுவில் பார்த்த வேலைகளின் விவரத்தை பல தடவை கேட்டுள்ளோம். ஆனால் இதுவரை அந்த பட்டியல் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் விவரம் தர வேண்டும் என்றார்.

ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி:- சேது நகரில் மயான மேடை இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக மயான மேடை அமைத்து தர வேண்டும் என்றார். மேலும், பல்வேறு பொருட்கள் மீதான விவாதம் நடைபெற்றது. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புரத்தினம் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்