தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க சட்டம் நிறைவேற்ற வேண்டும்
உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க சட்டம் நிறைவேற்றபட வேண்டும் என்று அகில இந்திய வக்கீல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க சட்டம் நிறைவேற்றபட வேண்டும் என்று அகில இந்திய வக்கீல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாவட்ட மாநாடு
அகில இந்திய வக்கீல்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மாநாடு சிவகங்கையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் நெல்சன் ஜீவா வரவேற்றார். மாவட்ட துணைசெயலாளர் இளையராஜா தொடக்க உரையாற்றினார். சிவகங்கை வக்கீல்கள் சங்க தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைச்சாமி, பொருளாளர் செல்வராஜ், இணை செயலாளர் மணிகண்டன், அரசு வக்கீல்கள் அழகர்சாமி, பிரபாகர், ஸ்ரீசாய் சுந்தர், துஷாந்த் பிரதீப்குமார், நிர்மலா, சேகர், மாவட்ட துணை தலைவர் அஜூதாகூர் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநில பொதுச் செயலாளர் முத்து அமுதநாதன் பேசினார்.
மாநாட்டின்போது புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாவட்ட தலைவராக ராஜசேகரன், செயலாளராக மதி, பொருளாளராக சொர்ணம், துணை தலைவர்களாக கமலதயாளன், அஜூ தாகூர், துணை செயலாளர்களாக நெல்சன் ஜீவா, இளையராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
வழக்காடு மொழி
மேலும், மாநாட்டில் வக்கீல்கள் சேம நல நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும். மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு சொந்தமாக நீதிமன்ற கட்டிடங்கள் கட்டி தர வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், சுத்தமான குடிதண்ணீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும்.
உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க சட்டம் நிறைவேற்றபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நிருபன் சக்ரவர்த்தி நன்றி கூறினார்.