குடியரசு தின விழா: 217 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம் -கலெக்டர் அனிஷ்சேகர் வழங்கினார்

குடியரசு தின விழாவில் 217 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் அனிஷ்சேகர் வழங்கினார்.

Update: 2023-01-27 00:02 GMT


குடியரசு தின விழாவில் 217 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் அனிஷ்சேகர் வழங்கினார்.

அணிவகுப்பு மரியாதை

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக குடியரசு தினவிழா, ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். மேலும், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தினார்.

பின்னர் விழாவில் 37 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 21 ஆயிரத்து 868 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து 217 காவல் துறை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை வழங்கினார்.

கலை நிகழ்ச்சிகள்

அதன்பின் விழாவில் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் அனிஷ் சேகர் வழங்கினார். அதன்படி மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 போலீசாருக்கும், 250 அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வ்ழங்கப்பட்டன.

பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் சீத்தாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலையார் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, கரும்பாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பழைய குயவர் பாளையம் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை சேர்ந்த 791 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) திரு.திவ்யான்ஷு நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்