புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நாளை கொண்டாட்டம்

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-01-24 18:30 GMT

குடியரசு தின விழா

குடியரசு தின விழா நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. விழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகிறார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார்.

விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இதையொட்டி விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேசிய கொடி ஏற்றப்படும் கம்பத்திற்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு வருகிறது. மேலும் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் பந்தல் அமைக்கப்படுகிறது.

அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தின விழாவில் அணிவகுப்பு மரியாதையில் ஈடுபடும் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட மாணவிகளும் அணிவகுப்பு மரியாதை ஒத்திகையில் நேற்று ஈடுபட்டனர். விழா மைதானம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

குடியரசு தின விழாவையொட்டி மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்