குடியரசு தின விழா துளிகள்...
பெரம்பலூர் எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா துளிகள் விவரம் வருமாறு:-
* குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றும் போது பார்வையாளர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடக்கும் போது பார்வையாளர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
* கலெக்டர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை சென்று பார்வையிடுவதற்கு ஜீப் கொண்டு வரப்பட்டது. அந்த ஜீப் தொடக்கத்தில் ஸ்டார்ட் ஆகவில்லை. அதன் பிறகு ஸ்டார்ட் ஆகியது.
* கலெக்டரிடம் நற்சான்றிதழ்களை வாங்க அரசு அலுவலர்களை அவர்களின் துறை வாரியாக நிற்க வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் படாத பாடு பட்டனர்.
* கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லாத நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாலும், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டதாலும் விழா களை கட்டியது.
* போலீஸ் மோப்ப நாய்களான பைரவா, நிஞ்சா ஆகியவை செய்த சாகசங்கள் மாணவ-மாணவிகளை மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்தது.
* முதல்-அமைச்சர் பதக்கங்களை பெற்ற போலீசாரும், நற்சான்றிதழ்கள் பெற்ற போலீசாரும், தீயணைப்பு துறை வீரர்களும், அரசுத்துறை அலுவலர்களும் கலெக்டரிடம் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
* கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ-மாணவிகளை கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவர்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்து கொண்டனர்.