குடியரசு தின விழா கொண்டாட்டம்

மண்டபம் யூனியன் பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

Update: 2023-01-26 18:38 GMT

பனைக்குளம், 

மண்டபம் யூனியன் பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

யூனியன் அலுவலகம்

மண்டபம் யூனியன் பகுதியில் 74-வது குடியரசு தினவிழா ெகாண்டாடப்பட்டது. இதையொட்டி உச்சிப்புளியில் உள்ள மண்டபம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ம.ஊ) பாண்டி, யூனியன் துணைத்தலைவர் பகவதி முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார் முன்னதாக அலுவலக மேலாளர் சோமசுந்தர் அனைவரையும் வரவேற்று பேசினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தி) ஜெகநாதன், இருக்கை உதவியாளர் சரவணன், கணக்கர் பாக்கியம், அலுவலக உதவியாளர்கள், பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் தவுபீக் அலி, உஷா லெட்சுமி, சபியா ராணி, மாரியம்மாள் செல்லச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ராஜா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் திருப்பதி, பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இளநிலை உதவியாளர் முனியசாமி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

28 ஊராட்சிகள்

இதேபோல் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சி தலைவர்கள் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதன்படி அழகன்குளம் வள்ளி, ஆற்றாங்கரை முகமது அலி ஜின்னா, ரெட்டையூரணி கணேசன், இருமேனி சிவக்குமார், என்மனங்கொண்டான் கார்மேகம், காரான் சக்திவேல், கீழநாகாச்சி ராணி கணேசன், சாத்தக்கோன்வலசை நாகேசுவரி, தாமரைக்குளம் களஞ்சியலட்சுமி, தேர்போகி மோகன்குமார், பட்டணம்காத்தான் சித்ரா மருது, பனைக்குளம் பவுசியாபானு, பிரப்பன்வலசை கலா உடையார், புதுமடம் காமில்உசேன், புதுவலசை மீரான்ஒலி, பெருங்குளம் கோ.சிவக்குமார், மரைக்காயர்பட்டினம் பைரோஸ் ஆசியம்மாள், மானாங்குடி பரமேசுவரி, வாலாந்தரவை முத்தமிழ்செல்வி, வெள்ளரிஓடை சந்திரசேகர், வேதாளை செய்யது அல்லாபிச்சை, நொச்சியூரணி சீனி அரசு, உள்பட 28 ஊராட்சிகளிலும் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சிகளில் துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு ஊராட்சி செயலாளர்களும் செய்து இருந்தனர்.இதுபோல் ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினம் ஹமிதியா ராணி ஜாகீர் உசேன், அத்தியூத்து அப்துல் மாலிக், சித்தார்கோட்டை முஸ்தரி ஜஹான் ஆகியோர் அந்தந்த ஊராட்சிகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். இதில் துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் மன்றத்தினர், கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் செய்திருந்தனர். இதேபோல அனைத்து கிராமங்களிலும் இந்து சமூக தலைவர்கள்.முஸ்லிம் ஜமாத்துக்கள், மற்றும் அனைத்து சமூகத்தினர்களும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்