பதிதாக 7 பேருக்கு கொரோனா

புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-11 17:54 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து இருந்தது. இந்நிலையில் தற்போது தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 56 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்