சேதுபாவாசத்திரம் பகுதியில் விசைப்படகுகளில் மராமத்து பணிகள் தீவிரம்

மீன்பிடி தடைக்காலத்தையொட்டி சேதுபாவாசத்திரம் பகுதியில் விசைப்படகுகளில் மராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. மராமத்து பணிகள் செய்ய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-17 20:40 GMT

சேதுபாவாசத்திரம்:

மீன்பிடி தடைக்காலத்தையொட்டி சேதுபாவாசத்திரம் பகுதியில் விசைப்படகுகளில் மராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. மராமத்து பணிகள் செய்ய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

மீன் இனப்பெருக்க காலம் என அரசு அறிவித்து ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளில் 246 விசைப்படகுகள் இருந்தன. 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் 188 படகுகள் முழுவதும் சேதமடைந்தன. இதனால் அரசு வழங்கிய நிவாரணத்தை கொண்டு 146 விசைப்படகுகள் மராமத்து செய்து மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

படகுகளில் மராமத்து பணிகள்

தற்போதுள்ள மீன்பிடி தடைக்காலத்தை பயன்படுத்தி இப்பகுதியில் உள்ள விசைப்படகுகளை மராமத்து பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஒரு விசைப்படகுகளை பழுதுநீக்கம் செய்வதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவு செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் கூறுகையில், தடைக்காலத்தில் 61 நாட்கள் மீன்பிடி தொழிலுக்குச் செல்லாமல் ஒரே இடத்தில் விசைப்படகுகளை நிறுத்தி வைப்பதால் முழுமையாக மராமத்து பணிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

ரூ.5 முதல் ரூ.15 வரை செலவாகிறது

சாதாரணமாக ஒரு விசைப்படகை கரையில் ஏற்றி சுத்தம் செய்து சிறிய அளவில் மராமத்து பணிகள் செய்து வர்ணம் பூசி ரூ.4 லட்சம் வரை செலவாகிறது. தற்போது படகு முழுமையாக மராமத்து பணிகள் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு விசைப்படகை முழுமையாக மராமத்து செய்ய ரூ. 5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை தேவைப்படுகிறது. நலிந்து வரும் மீன்பிடி தொழிலை பாதுகாக்க மீன்பிடி தடைக்காலங்களில் மராமத்து பணிகளுக்காக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்