ஏலகிரி மலை பாதையில் பழுதான பாலம் சீரமைப்பு பணி

ஏலகிரி மலை பாதையில் பழுதான பாலம் சீரமைப்பு பணி நடந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Update: 2022-07-30 17:17 GMT

சுற்றுலா தலமான ஏலகிரி மலைக்கு செல்ல பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. வார விடுமுறையான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 9-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள பாலம் பழுதடைந்ததால் திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிசுந்தரம் உத்தரவின் பேரில், உதவி பொறியாளர் சீனிவாசன் தலைமையில் சாலை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் சாலை பணியாளர்கள் நேற்று பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காலை 10 மணி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

மதியத்திற்கு மேல் பணிகள் முடிவடைந்து இருக்கலாம் என நினைத்து வாகனஓட்டிகள் சென்றனர். பணிகள் முடியாததால் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நின்றனர். மாலை 4.30 மணியளவில் சாலை சீரமைப்பு பணிகள் முடிவடைந்து போக்குவரத்து சீரானது.

Tags:    

மேலும் செய்திகள்