ஏற்காடு மலைப்பாதையில் சீரமைப்பு பணி

ஏற்காடு மலைப்பாதையில் சீரமைப்பு பணியை சித்ரா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2023-05-05 20:32 GMT

ஏற்காடு

ஏற்காட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவுகள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. அங்கு தற்காலிகமாக மணல் மூட்டைகள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டு சாலை போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த கொண்டை ஊசி வளைவுகள் இடையே மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் கடந்த 10 நாட்களாக சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா நேற்று மலைப்பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதுவரை பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் 2 ஆண்டுகள் கழித்து கோடை விடுமுறை காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டிற்கு வரும் நேரத்தில் ஏற்காட்டில் வாழ்கின்ற பொதுமக்களை வஞ்சிக்கும் வகையில் அதிகாரிகள் மெத்தனமாக இந்த வேலையை செய்வதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். உடனடியாக இந்த சாலையில் போக்குவரத்தை தொடங்கி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இயல்பாக சென்று வர ஏதுவாக இலகு ரக வாகனங்களையாவது உடனடியாக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், அ.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் புகழேந்தி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாயவன், மனோ, தினேஷ், உதயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்